குமாரபாளையத்தில் கட்சி பாகுபாடின்றி குறைகளை கேட்டறிந்த நகராட்சி சேர்மன்

குமாரபாளையத்தில் கட்சி பாகுபாடின்றி குறைகளை கேட்டறிந்த நகராட்சி சேர்மன்
X

குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் 16வது வார்டில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

குமாரபாளையத்தில் கட்சி பாகுபாடின்றி வார்டு பகுதிகளில் குறைகளை நகராட்சி சேர்மன் கேட்டறிந்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேட்சை 9 எனும் விதத்தில் வெற்றி பெற்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 ஓட்டுக்கள் பெற்று தலைவர் பதவியை பெற்றார். இவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதரவு தெரிவித்தனர்.

தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்து, சாலை சேதம், வடிகால் அடைப்பு, மின் விளக்கு பழுது, கழிப்பிடம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து புகார்கள் சொல்லி, விரைவில் பணிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தி வருகிறார். இந்த செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்து வருகிறது. அதே போல் வேலை வாங்கும் போது மேல் மட்ட அதிகாரிகள், கீழ் மட்ட தொழிலாளர்களிடம் மரியாதையை குறைவான வார்த்தைகளை உபயோகம் செய்யக்கூடாது எனவும், திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், பணிகள் செய்யும் போது உயர் அதிகாரிகள் சிலர் டேய், போடா, வாடா, என கூறி வருவது இயல்பு. நாங்களும் அதனை பொருட்படுத்தாமல் பணி செய்து வருவோம். தற்போது வந்துள்ள புதிய சேர்மன் விஜய்கண்ணன் எங்களைப் போன்ற கீழ் மட்ட தொழிலாளர்களை அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக பேசுவது கூடாது, கண்ணியமான வார்த்தைகாளால் மட்டுமே பணி செய்திட அழைத்தல் வேண்டும், என அறிவுறுத்தி வருவது, எங்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று 16வது வார்டு பகுதியில் குறைகள் கேட்டறிந்தார். கவுன்சிலர் பூங்கொடி, நிர்வாகி வெங்கிடு, செந்தில், கவுன்சிலர்கள் வேல்முருகன், அழகேசன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!