குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மரியாதை

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மரியாதை
X

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் பொது செயலர் தினகரன், மாவட்ட செயலர் நல்லியப்பன் ஆலோசனை படி, எம்.ஜி.ஆர் 34ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. காவேரி நகர் முதல் ஆனங்கூர் பிரிவு சாலை வரை நடந்த மவுன ஊர்வலத்திற்கு நகர செயலர் அங்கப்பன் தலைமை வகித்தார்.

அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிர்வாகிகள் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ராஜமாணிக்கம், நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், நகர அவைத் தலைவர் சீனிவாசன், அம்மா பேரவை செயலர் ரமேஷ், நகர பொருளர் தேவராஜன், நகர இணை செயலர் தினேஷ், மற்றும் சார்பு அணியினர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி