குமாரபாளையத்தில் 7 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்: சுகாதாரத்துறை தகவல்

குமாரபாளையத்தில் 7 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்: சுகாதாரத்துறை தகவல்
X
குமாரபாளையத்தில் 7 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை ஆணையர் ஸ்டான்லிபாபு கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 664 பேர், நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 633 பேர், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

குமாரபாளையத்தில் தற்போது 7 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு தோறும் தினமும் சென்று கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார்கள். மற்றொரு குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.

அரசு அறிவித்த விதிமுறைகளை பொதுமக்கள், வணிக நிறுவனத்தார் பின்பற்றுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்து, விதி மீறும் கடையினர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Tags

Next Story