குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி விழுந்து, வீட்டு ஓனர் பலி

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி விழுந்து,  வீட்டு ஓனர் பலி
X

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி வீட்டு ஓனரின் தலையில் விழுந்தது.

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி, வீட்டு ஓனரின் தலையில் விழுந்தது, இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

குமாரபாளையம் புது பள்ளிபாளையம் சாலை, ஆறுமுக கவுண்டர் லைனில் வசித்து வந்தவர் சக்கரபாணி,. தச்சு வேலை செய்பவர்.

இவர் சானார்பாளையம் பகுதியில் உள்ள தனது இடத்தில் வீடு கட்ட,போர்வெல் போடும் பணியை துவக்கினார். போர்வெல் வாகனத்தில் பழுது ஏற்பட்டு ஊழியர்கள் அதனை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது போர்வெல் வாகனம் அருகேசக்கரபாணி வந்த போது, எதிர்பாராதவிதமாக 20 அடி நீளமுள்ள இரும்பு ராடு சக்கரபாணி தலை மேல் விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றனர்.

இவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி தேவிகா, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்,

போர்வெல் ஆபரேட்டர் ஈரோடு மாவட்டம், அத்தாணியை சேர்ந்த ஆறுமுகம், என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!