குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அமமுகவினர் 12 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அமமுகவினர் 12 பேர் வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் நகராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முன்பு சென்று அண்ணாவின் நினைவு நாளான நேற்று மரியாதை செலுத்தினர்.

குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளார்கள் முதற்கட்ட பட்டியல் தலைமை கழகத்தால் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் லோகநாதன், குணசுந்தரி, ஞானசேகர், சுரேஸ், கவிதா, விமலா, அங்கப்பன், சந்திரபிரபா, நித்யா, கதிர்ராஜ், ரமேஷ், ரகுபதி ஆகியோர் 3,4,6,11,13,14,15,17,19,22,24,31`ஆகிய வார்டுகள் முறையே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முன் சென்று அண்ணாவின் நினைவு நாளான நேற்று மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!