குமாரபாளையத்தில் 'எஸ்.எஸ்.எல்.சி' எனக் குறிப்பிட்டு அமமுக வேட்பாளர் பிரச்சாரம்

குமாரபாளையத்தில் எஸ்.எஸ்.எல்.சி எனக் குறிப்பிட்டு அமமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் சந்திரபிரபா தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையத்தில் ‘எஸ்.எஸ்.எல்.சி’ எனக் குறிப்பிட்டு அமமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஒவ்வொருவரும் தனது பெயருடன் 10ம் வகுப்பிற்கு மேல் படித்த பட்டப்படிப்பு, டிப்ளமா படிப்பு ஆகியவற்றைதான் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால் குமாரபாளையம் 17வது வார்டில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சந்திரபிரபா தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் தனது பெயருக்கு பின்னால் எஸ்.எஸ்.எல்.சி. எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இவரது பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கிறது.

ஜே.கே.கே. சாலை, திருவள்ளுவர் வீதி, கத்தாளபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நகர செயலர் அங்கப்பன், வேட்பாளரின் கணவரும், கட்சியின் அவை தலைவருமான சீனிவாசன், உள்ளிட்ட பலர் பிரச்சாரம் செய்தனர். இவரது துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆரின் படம் பெரிதாக அச்சிட்டதற்காக பலரும் இவரை பாராட்டினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!