குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பரிசாக கொடுத்த போலி கொலுசால் பரபரப்பு
குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பரிசாக கொடுத்த போலி கொலுசை காண்பிக்கும் பெண்.
குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புடவை, பணம், வேட்டி, கொலுசு உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க.வினர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, படத்துடன் கூடிய கொலுசுகளை வழங்கியதாக தெரிகிறது.
இதனை வெள்ளிக் கொலுசு என்று எண்ணி 11வது வார்டைச் சேர்ந்த இரு பெண்கள் நகைக்கடைக்கு சென்று விற்க முயன்றனர். அப்போது அவைகள் எவர்சில்வர் கொலுசு என்பதும், வெள்ளி முலாம் பூசப்பட்டதும் தெரியவந்தது. இதனால் இவர்கள் மட்டுமின்றி இது போல் கொலுசு வாங்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த கொலுசுகள் போலி என தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu