குமாரபாளையத்தில் 2 கி.மீ., 4 அடி ஆழம் தூர்வாரி அசத்திய நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் 2 கி.மீ., 4 அடி ஆழம் தூர்வாரி அசத்திய நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களால் தூர் வாரப்பட்ட கோம்பு பள்ளம்.

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இரண்டு கி.மீ.தூரம், நான்கு அடி ஆழம் தூர் வாரி அசத்தினர்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறுகையில், வடகிழக்கு பருவ மழை பெய்வதையொட்டி மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அறிவுரை பேரில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் மாஸ் கிளீன் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி 120 பணியாளர்கள், பொக்லைன் இயந்திரங்கள், கடாச்சி இயந்திரங்கள் உதவியுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணி செய்யாதிருந்த கோம்பு பள்ளத்தில் இரண்டு கி.மீ. தூரம், நான்கு அடி ஆழத்திற்கு தூர் வாரப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!