ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
வாக்குப்பதிவு செய்வதற்காக வரிசையில் நின்ற வாக்காளர்கள் (கோப்பு படம்)
நாடாளுமன்ற தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 74.06 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தேர்தல் பணியாற்றி வந்தனர். ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தினர். குமாரபாளையம் தொகுதியில் ஓட்டுக்கள் பதிவு செய்யக்கூடிய ஈ.வி.எம். மெசின்கள், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் வந்து,மெசின்கள் வைக்கப்பட்ட அறைகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், ஏப். 19ல் லோக்சபா ஓட்டுப்பதிவு குமாரபாளையம் தொகுதியில் நடந்தது. வாக்குப்பதிவு தொடர்பாக குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:-
குமாரபாளையம் தொகுதியில் 279 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் தேர்தல் சமயத்தில் கண்ட்ரோல் யூனிட் 334, பேலட் மெசின் 334, வி.வி.பேடு 362, பாதுகாப்பு அறையில், மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, தேர்தலுக்காக, ஏப். 18ல் உரிய ஓட்டுச்சாவடிகளுக்கு, உரிய ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். குமாரபாளையம் தொகுதியில் மக்கள் தொகை 2 லட்சத்து 57 ஆயிரத்து 740 வாக்காளர்கள் இருந்த நிலையில், அனைத்து ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்களில், மொத்த மக்கள்தொகையில் 74.06 சதவீதம் பதிவானது. அனைத்து ஓட்டு மெசின்களும் ஈரோடு, ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu