குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் ஆசிரியை காயம்-விரிவுரையாளர் கைது

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில்   ஆசிரியை காயம்-விரிவுரையாளர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய வழக்கில் ஆசிரியை படுகாயமடைந்ததால் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருவங்காடு பகுதியில் வசிப்பவர் வித்யாபாரதி (வயது27.) தனியார் பள்ளி ஆசிரியை. இவர் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க வந்த ஹோண்டா யூனிகார்ன் வாகன ஓட்டுனர் வேகமாக டி.வி.எஸ். வாகனத்தின் மீது மோதியதில் வித்யாபாரதி படுகாயமடைந்தார்.

இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி விரிவுரையாளர் திருச்செங்கோடு துத்திபாளையத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் வெங்கடேஸ்வரன்,( 36,) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!