குமாரபாளையம் தொகுதியை மேம்படுத்துவேன்: சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி

குமாரபாளையம் தொகுதியை மேம்படுத்துவேன்: சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி
X
குமாரபாளையம் தொகுதியில் தரமான சாலைகள், பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிப்பட வசதிகள் கிடைக்கவும், தொழில் துவங்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா பிரச்சாரம்.

நம்ம குமாரபாளையம் என்ற சேவை அமைப்பை தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாக குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தின் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருகிறார் ஓம்சரவணா. அவர் இந்தமுறை குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் வைரம் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.


ஓம்சரவணா நகரப்பகுதியில் வீதி வீதியாகவும், கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று குமாரபாளையம் நகராட்சிப் பகுதியிலுள்ள சிவசக்தி நகர், டீச்சர் காலனி, பூங்கொடி மில், டேன் இந்தியா மற்றும் பள்ளிபாளையம் ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் கூறியதாவது, குமாரபாளையம் தொகுதியில், அனைத்து பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளான தரமான சாலை வசதிகள் ஏற்படுத்தி தருவேன். சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தருவேன்.

அனைத்து பகுதிகளிலும், நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருவதோடு, நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கழிவு நீரைத் தூய்மைப்படுத்தவும், பொதுக் கழிவுப் பொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சுயஉதவிக் குழுக்களின் தொழில்துறைகள் விரிவடைய வழி வகுக்கப்படுவதோடு, ஜவுளி மற்றும் நெசவு தொழில்களுக்கு சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தருவேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை ரூ-3000 ஆக உயர்த்திடவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு மாத உதவித் தொகைரூ- 5 ஆயிரமாக உயர்த்தவும், தனியார்துறைகளில் 5 சதவீத வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் வலியுறுத்துவேன்.


மண்ணின் தன்மைகேற்ற வகையில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை உரங்கள் பயன்பாடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் தங்கள் தனிதிறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

முக்கிய தொழிலான விவசாயம் மற்றும் நெசவுத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். சிறந்த தொகுதியாக குமாரபாளையம் தொகுதி மாற்றப்படும். அரசுத் திட்டங்கள், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.

குமாரபாளையம் தொகுதி நல்ல வளர்ச்சியினை அடைய பொதுமக்கள் எனக்கு வைரம் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தொகுதியில் கொடுத்த அனைத்து உறுதிமொழிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.

அப்போது ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, மறைந்த கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா அவர்கள் தொழில்துறையிலும், கல்வித்துறையிலும் ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார்கள், அவரது வாரிசு நீங்கள். அதுமட்டுமல்லாது நம்ம குமாரபாளையம் என்ற சேவை அமைப்பை தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாக குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தின் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க பாடுபட்டு வருகிறீர்கள். எனவே உங்களுக்கு நிச்சயம் வாக்களிப்போம் என உறுதிபட தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!