குமாரபாளையம் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள்

குமாரபாளையம் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள்
X
குமாரபாளையம் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, அம்மாபேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (வயது36.) இவருக்கு திருமணம் முடிந்து மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே உள்ள பழைய டூவீலர் விற்பனை செய்யும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனத்தில் விற்பனை பணியாளராக பணியாற்றி வந்தார்.

தற்காலிகமாக சேலம் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். ஜூலை 7ல் இவரது உறவினரிடம் போனில் பேசியுள்ளார். அதன் பின் எவ்வித தொடர்பும் இல்லை. எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து இவரது தந்தை மதலைமுத்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் காணமல் போன பூபாலனை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இந்நிலையில் வால்ராசபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் வெப்படை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மலர்விழி தலைமையில் போலீசார் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தின் மேலே உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அப்போது விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் போலியானதா அல்லது அரசு மதுபான கடை பாட்டில்களா என்பது குறித்து சேலம் ரசாயன ஆலைக்கு சோதனைக்காக போலீசார் அனுப்பி உள்ளனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!