குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (கோப்பு படம்)

குமாரபாளையத்தில், சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி தலைமையில், எஸ்.ஐ.-க்கள் மலர்விழி, முருகேசன், சேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில், கத்தாளபேட்டை காமாட்சி அம்மன் கோவில் அருகில், அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன், 55, குப்பாண்டபாளையம் பள்ளர் தெருவில் கிருஷ்ணன், 40, சத்யா நகரில் பொன்சீனி, 46, ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அதிக போதை வர, ஊமத்தம் இலை சாற்றையும் கலந்திருந்தனர். இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!