கள்ளத்தொடர்பு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது

கள்ளத்தொடர்பு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே கள்ளத்தொடர்பு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் கத்தேரி பிரிவு, பாரதி எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் மலர், 42. பூ வியாபாரம். குமாரபாளையம் அருகே சின்னையா நகர் பகுதியில் கணேஷ்குமார், 32. ஆட்டோ ஓட்டுனர். இருவரும் மூன்று வருடமாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக தெரிகிறது. மலர், வியாபாரம் சம்பந்தமாக ஒருவர் வசம் பேசியதை தவறாக எடுத்துக்கொண்டு, கணேஷ்குமார் அடித்ததாக கூறப்படுகிறது.. மலரின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது, தன் மகனுக்கும் விபரம் தெரியும் அளவிற்கு பெரியவன் ஆகிவிட்டன என்பதால், இனி வீட்டிற்கு வார வேண்டாம், பேச வேண்டாம் என மலர் கூறியுள்ளார். ஆனால், வழியில் போகும் போதும், வரும் போதும் கணேஷ்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் கோட்டைமேடு மேம்பாலம் அருகில், டி.வி.எஸ். அப்பாச்சி டூவீலரில் வந்த மலரை, வழிமறித்து, வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டு, தன்னுடன் எப்போதும் போல் பழக வேண்டும் என்று கூறி, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மலர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளதையடுத்து, போலீசார் கணேஷ்குமாரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu