கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை...!

கணவன்
மனைவி தூக்கிட்டு தற்கொலை...!
பள்ளிபாளையத்தில் கணவன்
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசுக்கு தெரியாமல் பிணத்தை அடக்கம் செய்ய முற்பட்டபோது பாதி வழியில் பிணத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மகனிடம் விசாரணை செய்தனர்.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியை சார்ந்தவர் சண்முகம் 50, இவரது மனைவி உஷா, 44, விசைத்தறி தொழிலாளியான இந்த தம்பதிகளுக்கு மகள்
லாவண்யா, 23 மற்றும் மகன் பூபதி, 21, உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி தற்போது கோவையில் வசித்து வரும் நிலையில். பூபதி ஈரோட்டில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு பெற்றோருடன் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் பூபதி கடந்த சில மாதங்களாக நிதி நிறுவனங்களில் கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுறது. இதுகுறித்து அடிக்கடி குடும்ப தகராறு எழுந்து வந்துள்ளது. பலமுறை அறிவுரை கூறியும் தொடர்ந்து பூபதி பல்வேறு இடங்கல் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடன் குறித்து மீண்டும் தகராறு எழுந்துள்ளது .மகனுக்கு அறிவுரை வழங்கி விட்டு, மன உளைச்சலுடன் பூபதியின் தாய், தந்தையர் இருவரும் அறையில் படுக்கச் சென்று விட்டனர்.
இன்று காலை வெகு நேரம் ஆகியும் கணவன் மனைவி இருவரும் அவரது அறையில் இருந்து வெளிவராத காரணத்தால், மகன் பூபதி உள்ளே சென்று பார்த்த போது, அறையில் உள்ள ஜன்னலில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் தூக்கில் தொங்கியவர்களை கீழே இறக்கி பார்க்கும் பொழுது இருவரும் இறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பிணத்தை அவசரம் அவசரமாக அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டு பள்ளிபாளையம் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், பாதி வழியில் தகவல் கிடைத்து வந்த பள்ளிபாளையம் போலீசார், தற்கொலை செய்து கொண்டு இறந்த இருவர் பிணத்தையும் கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் கணவன், மனைவி இறந்த காரணம் குறித்து பள்ளிபாளையம் போலீசார், மகன் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் வாங்கிய விவகாரத்தில் எழுந்த குடும்ப தகராறில் தாய் தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu