குதிரைகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம், விவசாய பயிர்கள் சேதம்..!

குதிரைகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம், விவசாய பயிர்கள் சேதம்..!
X

குமாரபாளையம் புறவழிச்சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன.

குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் ,விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் விவசாய தோட்டங்களில் இறங்கி விவசாய பயிர்களை மீந்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குமாரபாளையத்தில் குதிரைகளால் போக்குவரத்து இடையூறு,விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் பல குதிரைகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். காலை வேளையில் நடை பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களும் அஞ்சியவாறு சென்று வருகின்றனர்.

சேலம் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. விபத்து சம்பவங்களும் குதிரைகளால் நடந்து வருவதால், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குதிரைகளை வளர்ப்போர் இதை கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு தேவை என்கிறபோது குதிரையை தேடி பயன்படுத்திக்கொள்கின்றனர். உதாரணமாக வண்டியில் ஏதாவது ஏற்றவேண்டும் என்றால் குதிரையை தேடி வந்து வண்டி இழுக்க பயன்படுத்துகின்றனர்.

Tags

Next Story
ai and the future of education