குமாரபாளையத்தில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் ஹோமியோபதி இலவச   மருத்துவ முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

 குமாரபாளையம் விடியல் ஆரம்பம், இந்திரா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம், இந்திரா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் ரவி முகாமை துவக்கி வைத்தார். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகம், பித்தப்பை கற்கள், தைராய்டு, மூட்டு வாதம், சரவாங்கி, குழந்தைகள் நல மருத்துவம், நரம்பியல் நோய்கள், உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கபட்டது.

நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று நோயாளிகளுக்கு இலவச மாத்திரைகள் வழங்கினார். ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட்டது. டாக்டர்கள் இந்திரா, ஜனனி, தமிழரசு, யசோதா பங்கேற்று சிகிச்சையளித்தனர். பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!