குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி வகுப்பு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி வகுப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி வகுப்பு அங்குள்ள வீட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 05:00 மணியளவில் மழை வந்ததாலும், மின்சாரம் தடை பட்டதாலும் நகராட்சி அலுவலக வளாகத்தில் வகுப்பு நடத்திக்கொள்ள நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி கொடுத்ததுடன், வகுப்பு நடைபெறும் அழகை நேரில் கண்டு ரசித்தனர். காகித மடிப்பு ஓரிகாமி என்ற கலையை தாமரைசெல்வன் கற்றுக்கொடுத்தார். அப்போது மாவட்ட நிர்வாகி பிரகாஷ் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!