குமாரபாளையம் விபத்துக்கு காரணமான மண் குவியலை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்

குமாரபாளையம் விபத்துக்கு காரணமான மண் குவியலை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் சாலையில் குவிந்த மண்ணை அகற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள்.

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மண் குவியலை நெடுஞ்சாலை பணியாளர்கள் அகற்றினர்.

குமாரபாளையத்தில் சில நாட்கள் முன்பு தினமும் மழை வந்து கொண்டிருந்தது. இதனால் சேலம் சாலை குளத்துக்காடு பகுதியில் டிவைடரில் அதிக மண் குவிந்து காணப்பட்டது.

இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். விபத்துக்கு காரணமான இந்த மண் குவியல் அகற்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையில் தேங்கியுள்ள மண் குவியலை அகற்றினர்.

Tags

Next Story