டிவைடர் இடைவெளியை இல்லாமல் வைத்த நெடுஞ்சாலை பணியாளர்கள்

டிவைடர் இடைவெளியை  இல்லாமல் வைத்த நெடுஞ்சாலை பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் டிவைடரை இடைவெளி இல்லாமல் வைத்தனர்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை டிவைடர் இடையில் உள்ள வழியை பயன்படுத்தி குறுக்கே செல்லாமல் இருக்க இடைவெளி சரி செய்யப்பட்டது

குமாரபாளையம் சேலம் சாலையில் காவல் நிலையம் முதல் கத்தேரி பிரிவு வரை இரண்டு கி.மீ. தூரம் சாலையில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து உள்ளதால், அந்த இடங்களில் டிவைடர்கள் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்தி சில நபர்கள் அந்த சிறிய வழியில் சாலையை கடந்து வருவதால், அடிக்கடி பலர் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இதனை தடுக்க மின் கம்பங்கள் வைக்கப்பட்ட இடங்கள், அதிக இடைவெளி உள்ள இடங்கள் ஆகிய இடங்களில் டிவைடர்களை நெடுஞ்சாலை பணியாளர்கள் இடைவெளி இல்லாதவாறு பொக்லைன் உதவியுடன் நகர்த்தி வைத்தனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு