குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க உயர் கோபுரம் அமைப்பு

குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க உயர் கோபுரம் அமைப்பு
X

தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரங்கள்.

தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க குமாரபாளையத்தில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் ஜவுளி, பட்டாசு கடை உள்ளிட்ட பல கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் குமாரபாளையத்தில் ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பல கடைகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு ஆகிய இடங்களில் உயர் கோபுரம் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கோபுரத்தின் மேலே இருந்தவாறு போலீசார் கூட்டத்தை கண்காணிக்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது. இதில் கண்காணிப்பு கேமரா, போகஸ் மின் விளக்குகள், மைக் ஆகியன அமைக்கப்படவுள்ளன.

Tags

Next Story