ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி..!

ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி..!
X

குமாரபாளையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது

குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி நடந்தது.

தமிழக அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஹெல்மெட் விழிப்புர்ணவு பேரணி ராஜம் தியேட்டர் முன்பிருந்து துவங்கி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறைவு பெற்றது.

நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன், சரவணன், பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமாமகேஸ்வரி, நித்யா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாகன முகவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் பிடித்தவாறு பேரணியில் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டெம்போ, டூரிஸ்ட், ஆட்டோ இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பினை பின்பற்றி வாகனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர்விஜயகுமார், மற்றும் குமாரபாளையம் சாலை போக்குவரத்து துறை அதிகாரி பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 சிவகுமார் பங்கேற்றனர். பூங்குழலி பேசியதாவது:

மாணவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மாணவர்கள் ஓடும் பஸ்ஸில் ஏறி இறங்க கூடாது. சாலை வளைவுகளில் வாகனங்களில்முந்தி செல்ல கூடாது. வாகனங்களில் அதி வேகமாக செல்ல கூடாது. சாலையை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட வர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற் படுத்தினால் அதற்கு அவர்கள் பெற்றோர் தான் முழு பொறுப்பு. ,அனைத்து சாலை விதி முறைகளையும் பின்பற்ற வேண்டும். அவசர உதவிக்கு 108 அழைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் விஜயகுமார் பேசியதாவது:

ஒட்டுனர் உரிமம் பெறாத மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை. மாணவர்கள் அனைத்து சாலை விதி முறைகளையும் பின் பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings