குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி
குமாரபாளையத்தில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டியினை மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குமாரபாளையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டை இருசக்கரவானம் ஓட்டுனர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போக்குவரத்து விதிமுறை. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் ரூ.1000 வரை அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் தலைக்கவசத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வாகன ஓட்டுனர்கள் இருந்து வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் ஓட்டமானது திருவள்ளுவர் நகரில் துவங்கி, ஓலப்பாளையம், கம்பன் நகர், பெரியார் நகர், சடையம்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக 7 ஆயிரத்து 500, இரண்டாம் பரிசாக 2 ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதில் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், மாவட்ட பொருளாளர் ராஜாராம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவீந்திரன், தெற்கு நகர செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
வழி நெடுக பொதுமக்கள் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களை கைகள் தட்டி உற்சாகப்படுத்தினர். பொதுமக்கள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியாளர்கள் உற்சாகமாக போட்டியில் பங்கேற்று ஓடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu