பாண்டுரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு: லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

பாண்டுரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு: லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
X

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுவதற்காக நேற்று 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

குமாரபாளையம் பாண்டுரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வையொட்டி லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதகமாக வழங்கப்படுவது வழக்கம். இதற்காக நேற்று 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மேலும் கோவில் வளாகம் முழுதும் வண்ண, வண்ண தோரணங்கள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, மர தடுப்புகள் அமைக்கப்பட்டன. சொர்க்கவாசல் திறக்கவிருக்கும் லட்சுமிநாராயண சுவாமி கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில் மற்றும் திருவள்ளுவர் நகர் சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றிலும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai and future cities