குமாரபாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் சுகாதார விழிப்புணர்வு
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பொக்லின் மூலம் தூய்மை பணி செய்யப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் பல வார்டுகளில் தூய்மை பணி செயல்படுத்தி, நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையேசுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோம்பு பள்ளம் தூய்மை பணி, ஜே.கே.கே. சாலை, சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டது. கமிஷனர் விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
பொதுமக்கள், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தார் யாவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், தெருக்களில், கோம்பு பள்ளத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது. தூய்மையான நகாட்சியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
குப்பைகள் கொட்டக்கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பல இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன் மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 50 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர் நந்தினிதேவி, கதிரவன் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu