பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பவானியில், கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு உயர்த்திய கூலியை வழங்கக்கோரி, பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்சீட், நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர்கள் சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில செயலர் சின்னசாமி, சங்க செயலர் சித்தையன், சி.பி.ஐ. ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் மாதேஸ்வரன் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர். கைத்தறி நெசவாளர்களின் சூழலை உணர்ந்த தமிழக அரசு, அடிப்படை கூலியில் 10 சதவீதம், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வு வழங்குவதாக கைத்தறித்துறை மானிய கோரிக்கையில் அறிவித்தது.பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கூலி உயர்வு இதுவரையில் கிடைக்காததால் நெசவாளர்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளர்கள். எனவே விரைவாக அரசு இக்கூலி உயர்வை வழங்க வேண்டும்,நெசவாளர்களுக்கான போனஸை தறிக்கூட உரிமையாளர்கள் வழங்க வேண்டும்; நெசவாளர்கள் மாதம் முழுதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சங்க துணை தலைவர் ராசம்மாள், கைத்தறி சம்மேளன மாநில குழு உறுப்பினர் சுந்தரம், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பூபதி, சங்க பொருளாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu