குமாரபாளையத்தில் 15 நாட்களுக்கு கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

குமாரபாளையத்தில் 15 நாட்களுக்கு கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
X

குமாரபாளையத்தில் 15 நாட்கள் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது.

குமாரபாளையத்தில் இன்று முதல் 15 நாட்கள் கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது.

குமாரபாளையம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் பிப். 7 முதல் 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், பட்டு கிலோ 3 ஆயிரம் இருந்தது, தற்போது 6 ஆயிரத்து 500 ரூபாய் ஆனது. ஜரிகை ஒரு மார் 350 ரூபாய் என இருந்தது, தற்போது 750:00 ரூபாய் ஆனது.

வார்ப்பு பட்டு கிலோ 4 ஆயிரத்து 500 என இருந்தது, தற்போது 7 ஆயிரம் ரூபாய் என அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளி ரகங்களை ஆர்டர் எடுத்த விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து எந்த விலைக்கு ஆர்டர் எடுப்பது என்றும் புரியாத நிலை உள்ளது.

தை, மாசி மாதங்களில் திருமண முகூர்த்தங்கள், திருவிழாக்கள் அதிகம் இருக்கும் நிலையில் பட்டு சேலை வியாபாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குமாரபாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கடுமையான விலை உயர்வால் இதனை நம்பி வாழும் கைத்தறி மற்றும் சாய தொழில், அட்டை அடிப்பவர்கள் உள்ளிட்ட இதர சார்பு தொழில்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வர்த்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் குப்பண்ணன், குமரேசன், ரங்கநாதன், சுதாகரன், வீரகுமாரன், தியாகராஜன், முனிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
photoshop ai tool