குமார பாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம்

குமார பாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு  விழிப்புணர்வு கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்மோகன்  பேசினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில், கைத்தறி ரக ஒதுக்கீடு விழிப்புணர்வு கூட்டம் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீடு பிரிவு, உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்மோகன் பங்கேற்று பேசினார்.

அவர் கூறும்போது கைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடிய ரகங்களை விசைத்தறியில் நெய்யக் கூடாது. எந்தெந்த ரகங்கள் விசைத்தறியில் நெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தரும் உதவிகள் குறித்தும், தொழிலாளர் நல வாரியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது என்றார்.

இந்த கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் கைத்தறி துறை ஆய்வாளர்கள் கவுதமன், சுரேஷ்குமார், சுதா, தொழில் நுட்ப அலுவலர் அருள்குமார், சங்க செயலர் சவுந்தரராஜன்,பொருளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture