குமாரபாளையத்தில் 5 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் ஒப்படைப்பு

குமாரபாளையத்தில் 5 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் ஒப்படைப்பு
X

குமாரபாளையம் நகராட்சியில் 5 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணிகளை கவனிக்க 5 ஆம்னி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் 5 மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, பூத் சிலிப் வழங்கும் பணி ஆகியன நடைபெற்றன.

இதையடுத்து 73 ஓட்டுச்சாவடி மையங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் முறையே வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் மாயஜோதி, உதவி பி.டி.ஓ.,க்கள் மோகன்ராஜ், சிவகுமார், அசோக்குமார், பள்ளிபாளையம் உதவி பொறியாளர் தங்கராஜ் ஆகியோரிடம், ஒவ்வொரு மண்டலத்திகுரிய தேர்தல் நடத்துவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 5 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணிகளை கவனிக்க 5 ஆம்னி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
why is ai important to the future