மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழா

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழா
X

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழாவில், பயனாளி ஒருவருக்கு காசோலை வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழா நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழா

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட விழா நடந்தது.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் வாரிசுகளுக்கு கல்வி உதவி தொகை, நோட் புக், தையல் மெசின், பெட்டிக்கடை வைக்க பெட்டி மற்றும் பொருட்கள் வாங்க நிதியுதவி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குமாரபாளையத்தில் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்தது.

தாசில்தார் சிவகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சேலத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு 45ஆயிரம் மதிப்புள்ள பெட்டிக்கடை, மற்றும் பொருட்கள் வாங்க 15 ஆயிரம் நிதியுதவி, குமாரபாளையத்தில் பெண் ஒருவருக்கு தையல் மெசின், 80 மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது:

குமாரபாளையம் பகுதியில் 54 பேருக்கும், பரமத்தி வேலூரில் 35 பேருக்கும் இலவச வீட்டுமனை வழங்க, ஆர்.டி.ஒ. சுகந்தி உறுதியளித்துள்ளார். அவருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் எங்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவர் புஷ்பா, ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
ai and future cities