நாமக்கல்லில் செப். 13ம் தேதி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல்லில் செப். 13ம் தேதி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செப். 13ல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது சம்பந்தமான துண்டு பிரசுரம்.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் செப். 13ல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தரை தளத்தில் செயல்பட்டு வந்தது. இது மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லவும், கலெக்டரிடம் மனு கொடுத்து, எங்கள் குறைகளை சொல்லவும் ஏதுவாக இருந்தது.

அங்கு சாய்வு தளம், கழிப்பிட வசதிகள் இருந்தன. தற்போது இந்த அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பின்புறம், பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவானது அல்ல.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியும், இதுவரை ஆவின் பொருட்கள் வழங்காமல் நாமக்கல் ஆவின் மேலாளர் காலம் தாழ்த்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மீண்டும் பழைய இடத்தில் செயல்பட வேண்டியும், ஆவின் பாலகம் அமைக்க பொருட்களை வழங்காமல் இருப்பதை கண்டித்தும் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக செப். 13ல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!