குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி யாகம், ஜோதிட மாநாடு கருத்தரங்கம்

குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி யாகம், ஜோதிட மாநாடு கருத்தரங்கம்
X

குமாரபாளையத்தில் ஜோதிட மாநாட்டையொட்டி குரு பெயர்ச்சி யாகம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிட மாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

குமாரபாளையம் தனலட்சுமி திருமண மண்டபத்தில் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிட மாநாடு கருத்தரங்கம் ஒருங்கிணைப்பாளர் ரமேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. நேற்று அதிகாலை குரு பெயர்ச்சி யாகம் நடைபெற்றது.

யாகபூஜைகளை ஜனார்த்தனன் சிவம், அரவிந்தசிவம் குழுவினர் நடத்தினர். இதையடுத்து நடந்த கருத்தரங்கில் புஸ்கலாம்பாள், தமிழ்செல்வி, சத்யா, பானுமதி குத்துவிளக்கேற்றினர். பெரியசாமி, துரைசாமி, சின்னசாமி, முருகேசன், ஈஸ்வரன் உள்பட பலர் பேசினர். மாலையில் குருபகவான் கொடுப்பதில் சிறந்தது தனமா? குணமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

தனமே அணியில் ராஜா சங்கர் அணியினரும், குணமே அணியில் மணி முருகேசன் அணியினரும் பேசினர்.நடுவராக ரமேஸ்குமார் பங்கேற்றார். இன்று 2ம் நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai powered agriculture