செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்

செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்
X

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். 

குமாரபாளையத்தில் நடைபெற்ற செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டர் பங்கேற்றார்.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 9, 13, 25 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 186 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மானவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாகிகள் தரணிதரன், சிவசுந்தரம், அர்த்தனாரீஸ்வரன், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்