சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா

சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா
X
குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றிவிட்டு தாத்தா உயிரிழந்தார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கணேசன்(வயது 58.) எலெக்ட்ரீசியன். இவர் தனது 3 வயது பேரன் சுஜித்குமாருக்கு காய்ச்சல் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தின் முன்புறம் நிற்க வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியவாறு எஸ்.ஆர்.கே. பள்ளி சாலையில் வந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஈச்சர் வாகனம் இவர்கள் மீது மோதும் நிலையில், தப்பிக்க முடியாது என்ற முடிவில் பேரனை தூக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. டி.வி.எஸ். மீது டெம்போ மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். க்கு அழைத்து சென்று காட்டிய போது, யாவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். சிறுவன் சுரேஷ்க்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது