குமாரபாளையம் அருகே பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்ற கிராம சபா கூட்டங்கள்

குமாரபாளையம் அருகே பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்ற கிராம சபா கூட்டங்கள்
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு தலைவி புஷ்பா தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே நடைபெற்ற கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு தலைவி புஷ்பா தலைமையிலும், குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதன் தலைவி கவிதா தலைமையிலும் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்கால திட்டங்கள், மேற்கொள்ளவிருக்கும் பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகள் ஆகியன குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டன. கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business