தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு

தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் அருவங்காடு பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வல்வில் ஓரி நண்பர்கள் குழு சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அருகே அருவங்காடு பகுதியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் தலைவி புஷ்பா தலைமையில் நடைபெற்றது. வரவு, செலவு கணக்கு விபரங்கள் சமர்பிக்கப்பட்டதுடன் பிளெக்ஸ் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான வடிகால், குடிநீர் குழாய்கள், மின் விளக்குகள், தார் சாலை உள்ளிட்ட பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினர். வல்வில்ஓரி நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு