குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குப்பாண்டபாளையம் ஊராட்சி, குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார். இங்குள்ள ஜே.ஜே. நகரில் 140க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசிக்கும் இடத்தில், கழிப்பிடம் இல்லாமல் இருப்பது பெரிதும் சிரமமாக உள்ளதால் கழிப்பிடம் கட்டித்தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வடிகால் அமைத்திட வேண்டி மனு கொடுக்கப்பட்டது. பல இடங்களில் செய்யப்பட்ட பணிகள் குறித்து தகவல் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், நிர்வாகிகள் வேலுமணி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு