10, 11, தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

10, 11, தேர்வுகளில் அரசு
பள்ளி மாணவர்கள் சாதனை
10, 11, தேர்வுகளில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 239 பேர் தேர்வு எழுதியதில் 225 பேர் தேர்ச்சி பெற்றதில் 94.14 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று, சாதனை படைத்தனர். மாணவர்கள் விக்னேஷ் 490, ஹரிஷ்வா 485, தர்சனபாலா 477, ஆகிய மாணவர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம், பெற்றனர். அறிவியல் பாடத்தில் மனோஜ்குமாரும், சமூக அறிவியல் பாடத்தில் விக்னேஷ், விஷ்ணு, மவுலீஷ், திருகார்த்திக் ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
நடந்து முடிந்த 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
கிஷோர் 514, மணிமாறன் 505, நகுலன் 498, ஆகிய மாணவர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம், பெற்றனர். நெசவு தொழில் நுட்பம், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் தலா ஒருவர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.சாதனை படைத்த மாணவர்களை தலைமையாசிரியர் ஆடலரசு உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பாராட்டினர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியளவில் முதல் மதிப்பெண் 490 பெற்ற மாணவர் விக்னேஷ் என்பவரை பள்ளி ஆசிரியர் பெருமக்கள் பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu