அரசு கல்லூரியில் செப். 22ல் முதுநிலை மாணாக்கர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு

அரசு கல்லூரியில் செப். 22ல் முதுநிலை மாணாக்கர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் செப். 22ல் முதுநிலை மாணாக்கர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் செப். 22ம் தேதி முதுநிலை மாணாக்கர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்..காம்., வணிகவியல், எம்.எஸ்.சி. கணிதம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 22ம் தேதி காலை 09:30 மணியளவில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், தொடர்ந்து பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் மற்றும் கைபேசி வழியாகவும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழியில் பதிவு செய்த மாணாக்கர்கள் செப். 22ல் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணாக்கர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!