அரசு உதவி பெறும் கல்லூரியில் அலுவலருக்கு பணி நிறைவு விழா

அரசு உதவி பெறும் கல்லூரியில்  அலுவலருக்கு பணி நிறைவு விழா
X

குமாரபாளையம அரசு உதவி பெறும் கல்லூரியில் அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் கல்லூரியில் அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் கல்லூரியில் அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.

குமாரபாளையம அரசு உதவி பெறும் கல்லூரியான எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில், அலுவலர் கதிர்வேலுக்கு பணி நிறைவு விழா தலைவர் இளங்கோ தலைமையில் நடந்தது. துணை தலைவர், மற்றும் தாளாளர் ஈஸ்வர், புருஷோத்தமன், முதல்வர் பாலமுருகன் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவரை கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களின் காரில் அழைத்து சென்று, அவரது வீட்டில் விட்டு, வாழ்த்தி வந்தனர்.

முதல்வர் பாலமுருகன் பேசியதாவது:

அலுவலர் கதிர்வேல், உண்மையுடன், நேர்மையுடன் உழைத்தார். ஒரு பணியை கொடுத்தால், அதை செவ்வனே செய்து முடித்து விடுவார். அவரை நம்பி எந்த வேலையும் கொடுக்கலாம். குறிப்பிட்ட கால அளவில் ஒரு வேலை முடித்து விட வேண்டும் என்றாலும் அவரிடம் கொடுத்தால், நம்பிக்கையுடன் இருக்கலாம். இப்படிப்பட்ட ஊழியர்கள் கிடைப்பது, அமைவது அரிது. இவர் தனது ஓய்வு காலத்தில் சிறந்து வாழ்ந்திட கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story