யோகாசன போட்டியில் தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

யோகாசனம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்களை
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பாராட்டினார்.
யோகாசனம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மே 19ஆம் தேதி மாநில அளவிலான தேசிய யோகாசனப் போட்டி நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மௌலிதரன் தங்கப்பதக்கம், ருத்ரன் வெள்ளிப் பதக்கம் மற்றும் யோகாசன பயிற்சியாளர் பிரபு தங்கப்பதக்கம் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சியாளருக்கும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாரண இயக்க ஆசிரியர் அந்தோணி, பள்ளி ஆசிரியர் சிவகுமார், பி.டி.ஏ. உறுப்பினர்கள் அன்பரசு, ராஜேந்திரன் மற்றும் பாலாஜி, ஐயப்பன் நந்தகுமார் உடன் இருந்தனர்.
மாநில அளவிலான யோகாசன போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றது நமது நாமக்கல் மாவட்டத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். இதுபோல எல்லா மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில் தனி சிறப்பு பெற்றுத் திகழவேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதே வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடிக்க அடித்தளமாக இருக்கும். மாணவர்களிடம் ஒழுக்கம் பண்பு இருந்துவிட்டால் கல்வி என்பது இலகுவாக வந்துவிடும். இந்த காலகட்டத்தில் ஒழுக்கமும் பண்பும் அவசியமான ஒன்றாகும். ஆசிரியர்கள் மீது மரியாதை செலுத்துவது அவர்களின் பணிவை வளர்க்கும். பணிவு வந்துவிட்டால் ஒழுக்கமும் பண்பும் தானாக வந்துவிடும். எனவே, ஒழுக்கமும் பண்பும் இரு கண்கள் போன்றவை.
மாணவர்களுக்கு தனித்திறனுடன் ஒழுக்கமும் பண்பும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது' இவ்வாறு நகராட்சி தலைவர் நந்தகுமார் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu