புத்தக திருவிழாவிற்கு சென்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிற்கு குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர்.
புத்தக திருவிழாவிற்கு சென்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிற்கு குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சென்றனர்.
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக கண்காட்சி ஆக. 2ல் துவங்கி, தினமும் மாலை வேளைகளில் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடந்து வருகிறது. இங்கு தினசரி நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வருகின்றனர்.
குமாரபாளையத்தில் உள்ள சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை, ஈரோடு புத்தக கண்காட்சிக்கு, இல்லம் தேடிக் கல்வி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், விடியல் ஆரம்பம் அமைப்பாளருமான பிரகாஷ் தலைமையில் அழைத்து செல்லப்பட்டனர். குமாரபாளையத்திலிருந்து புறப்பட்ட வாகனத்தை சூர்யா ஜவுளி நிறுவன உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மாணவ, மாணவியர்களை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று வாழ்த்தி பேசினார்.
அவர் பேசியதாவது:
புத்தகங்கள் நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது புத்தகம் வாசிப்பதை தினமும் வழக்கமாக கொள்ள வேண்டும், புத்தகங்கள் வாங்கி, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும், மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தகத்திருவிழா ஆக. 13 வரை நடைபெறுகிறது. அமைப்பின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், தீனா, அங்கப்பன், சதீஷ், மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu