போட்டிகளில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவன் மலேசியா பயணம்..!

போட்டிகளில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவன் மலேசியா பயணம்..!
X

மாணவன் இளவரசன், குமாரபாளையம். 

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி மாணவன் அரசு சார்பில் மலேசியா பயணமானார்.

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி மாணவன் அரசு சார்பில் மலேசியா பயணமானார்.

தட்டாங்குட்டை ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்ச்செல்வன் தாமரைச்செல்வி தம்பதியர். இவர்களின் இளைய மகன் இளவரசன் வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறான்.

சென்ற ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றான். மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றதால் தரப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவனுக்கு கலையரசன் விருது தமிழக முதல்வர் கையால் வழங்கப்பட்டது.

அவ்வாறு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மலேசியா அழைத்துச் செல்லப்படஉள்ளனர். நான்கு நாட்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சனிக்கிழமை காலை மீண்டும் சென்னை வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் கலைத்திறன் வளர்க்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் வட்டார, தாலுக்கா, மாவட்ட, மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. கோவையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டிகளில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பரத நாட்டிய நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செங்கல்பட்டில் நடைபெற்ற போட்டியில் கிராமிய குழு நடன போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனர். சாதனை மாணவ, மாணவியருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசு மற்றும் விருது வழங்கினார். சாதனை மாணவ, மாணவியர்களை பாராட்டும் விழா குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் நடந்தது. இதில்

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் நேரில் பாராட்டி வாழ்த்தினார். இதில் தி.மு.க. பொறுப்பாளர்கள் செல்வம், ஞானசேகரன், நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன், தலைமை ஆசிரியர் ஆடலரசு, உதவி தலைமை ஆசிரியை சாரதா, (பொ), என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil