அறிவியல் கண்காட்சி போட்டியில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு..!

அறிவியல் கண்காட்சி போட்டியில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு..!
X

அறிவியல் கண்காட்சி போட்டியில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மகத்ராஜ்.

அறிவியல் கண்காட்சி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

அறிவியல் கண்காட்சி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் மகத்ராஜ் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில், அறிவியல் கண்காட்சி பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் குணசேகரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த மாணவர் அரசு சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெற்றுள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் பாராட்டினர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஆணையின் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச். 1ல் தொடங்கி வைத்து தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி

மாணவர் சேர்க்கை பேரணியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. பி.டி.ஏ. தலைவர் ரவி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன்,.காமாட்சி தி.மு.க. பிரமுகர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, வட்டாட்சியர் அலுவலகம், தெற்கு காலனி, புதுப்பள்ளிபாளையம் ரோடு, காலனி மருத்துவமனை வழியாக சென்று பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், மாணவர் சேர்க்கை குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் பலன்கள் குறித்தும் கோஷங்கள் போட்டவாறு சென்றனர்.

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!