குமாரபாளையம் அருகே தீ விபத்தில் அரசு பள்ளி மாணவன் பலியானார்

குமாரபாளையம் அருகே தீ விபத்தில் அரசு பள்ளி மாணவன் பலியானார்
X
குமாரபாளையம் அருகே தீ விபத்தில் அரசு பள்ளி மாணவன் பலியானார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி மலப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுப்ரமணி, (45.) பெருந்துறை சிப்காட்டில் பாய்லர் ஆபரேட்டர். இவரது மனைவி வனிதாமணி, (38.) ஸ்பின்னிங் மில் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு சஞ்சய், (14,) கவின், (12,) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் சங்கர் சிமெண்ட் ஆலை வளாகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு படித்து வந்தனர்.

நவ. 23ல் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். சஞ்சய் பள்ளிக்கு சென்று விட்டான். கவின் மட்டும் வீட்டில் இருந்தான். இவன் சுடுதண்ணீர் வைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளான். அப்போது எதிர்பாரத விதமாக துணியில் தீ பிடித்துக்கொண்டதால் வலியில் அலறியுள்ளான். இதைக்கேட்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கவினை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த கவின் நேற்று காலை 06:00 மணியளவில் உயிரிழந்தான். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்