அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகாரளிப்பு ஆலோசனை கூட்டம்!
அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகாரளிப்பு ஆலோசனை கூட்டம் - குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகாரளிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநிலம் முழுதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் வந்தததையடுத்து, அனைத்து அரசு கல்வி கல்லூரிகளில் பாலியல் சம்பந்தமான புகார்கள் பற்றி ஆலோசனை கூட்டம் நடத்த அரசு சார்பில் உத்திரவிடபட்டிருந்ததது. அதன் ஒரு கட்டமாக, குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகாரளிப்பு ஆலோசனை கூட்டம் பேராசிரியை சரவணாதேவி தலைமையில் நடந்தது. உள்ளக புகார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பத்மாவதி பங்கேற்று, பாலியல் புகார்கள் உள்ளதா? என்பது பற்றி மாணவிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து சரவனதேவி பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரப்பட்டுள்ளது. எவ்வித அச்சமும் இல்லாமல், மாணவிகள் கல்வி பயிலலாம். மாணவிகள் கல்வி கற்க இடையூறு செய்யும் விதமாக, பாலியல் தொந்தரவுகள் கொடுக்கும் நபர்கள் மீது, புகார்கள் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். பேராசிரியர் ரமேஷ்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu