நாங்க..சக்கரம் இல்லாமலேயே பேருந்து ஓட்டுவோம்..!கழன்று ஓடிய அரசு பஸ் டயர்..!

நாங்க..சக்கரம் இல்லாமலேயே பேருந்து ஓட்டுவோம்..!கழன்று ஓடிய அரசு பஸ் டயர்..!
X

அரசு பேருந்தில் இருந்து கழண்டு விழுந்த முன் சக்கரம்.


குமாரபாளையம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியது.

கழன்று ஓடிய அரசு பஸ் டயர்

குமாரபாளையம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 07:00 மணியளவில் சங்ககிரி அருகே வந்து கொண்டிருந்தது. பஸ் பழுதின் காரணமாக, சங்ககிரி டெப்போவில் மாற்று பஸ் ஏற்பாடு செய்து, ஓட்டுனர் ராஜா, மற்றும் நடத்துனர் மாயகிருஷ்ணன் அதில் அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்த பஸ்ஸை பவானி டெப்போவிற்கு கொண்டு செல்ல, குமாரபாளையம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பஸ் முன்புற டயர் கழன்று, அருகே இருந்த மூடியிருந்த கடை ஒன்றிந முன் போய் விழுந்தது. ஓட்டுனர் ராஜா, சாமர்த்தியமாக பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் போனது.

பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள்

ஒரு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடும் அளவுக்கு இருக்கிறது என்றால், அது எந்த அளவுக்கு பராமரிக்கப்பட்டிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அரசு டெப்போவில் ஒவ்வொரு பணிக்கும் ஷிப்ட் வாரியாக பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் பேருந்துகளை பரிசோதித்து அதன் இயக்கத்தை சோதனை இடவேண்டும். ஆனால் அரசின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

பயணிகள் இல்லாததால் தப்பித்தது. ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? இதற்கு யார் பொறுப்பாவார்கள்? பொதுமக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளை தயவு செய்து பராமரிப்பு செய்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றுங்கள்.

Tags

Next Story