அரசு பி.எட். கல்லூரியில் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

அரசு பி.எட். கல்லூரியில் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் பரிசு வழங்கினார்.

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

8வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் யோகா போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். நேற்று கொக்காராயன்பேட்டை பி.எச். சென்டர் டாக்டர் பாபுராதாகிருஷ்ணன் யோகா முத்திரைகள் குறித்தும், இலந்தகுட்டை பி.எச். சென்டர் டாக்டர் வெங்கடபிரகாசம் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்தும், சேலம் மாவட்ட யோகாசன சங்க செயலர் மாரிமுத்து உடல்,மனம் மற்றும் ஆன்மா என்ற தலைப்பிலும் பேசினர். யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags

Next Story