குமாரபாளையத்தில் தங்கம், வெள்ளி பரிசு: ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

குமாரபாளையத்தில் ஆர்வதுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்.
குமாரபாளையம் நகரில் சத்துணவு மையங்கள், நகராட்சி பள்ளிகள் ஆகிய 18 மையங்களிலும் மற்றும் நடமாடும் நான்கு வாகனங்களிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளிகளுக்குக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம், வெள்ளி நாணயங்கள் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்படும். அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா இல்லாத நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட தி.மு.க.வினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அதன்படி ஒவ்வொரு முகாமிலும் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், பரிசு பொருட்கள் பெற வேண்டி அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் பரிசு குலுக்கல் விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu