த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்
குமாரபாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் ஜி.கே.வாசன்
குமாரபாளையத்தில் பா.ஜ.க. அதரவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
குமாரபாளையம் பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள விசைத்தறி பூங்காக்களை விரிவு படுத்த வேண்டும். ஆனங்கூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், குமாரபாளையம், இடைப்பாடி, தேவூர், பள்ளிபாளையம் ஆகியவற்றை இணைக்கும் விதமாக ரயில்வே பாதை அமைக்க வேண்டும், பொதி பொருட்களால் சீரழியும் இப்பகுதி இளைஞர்களை காப்பாற்ற வேண்டும், தென்னை, பனை சார்ந்த தொழில்கள் ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றும் அவசிய, அவசர பணி நமது வேட்பாளருக்கு இருக்கிறது.
இதனை யார் செய்ய முடியும் என்றால், பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினரே செய்து முடிக்க முடியும். எனவே வேட்பாளர் விஜயகுமாருக்கு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து, தொகுதியின் மேம்பாட்டிற்கு துணை நிற்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமது வேட்பாளர் அண்ணாமலை, பா.ம.க. ராமதாஸ், (ஓ.பி.எஸ். என்பதற்கு பதிலாக ஈ.பி.எஸ். என மாற்றி கூறினார்) டி.டி.வி. உள்பட நமது கூட்டணியை ஆதரிக்கும் அத்தனை பேரின் அன்பை, ஆதரவை பெற்று, நமது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி பெற்றுத்தரக்கூடிய வேட்பாளராக நமது விஜயகுமார் இருக்கிறார். காமராஜ், மூப்பனார் ஆசி பெற்ற வேட்பாளர், உங்கள் மண்ணின் மைந்தருக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் த.மா.கா. மாவட்ட செயலர் செல்வகுமார், பா.ஜ.க. மாவட்ட செயலர் ராஜேஷ்குமார், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், பா.ம.க. மாவட்ட செயலர் சுதாகர், ஒ.பி.எஸ். அணி உரிமை மீட்பு குழு மாவட்ட நிர்வாகி நாகராஜன், உள்பட பலர் பங்கேற்றனர்.
திறந்த வேனில் வந்த வாசன், பள்ளிபாளையம் பிரிவு அருகே வந்ததும், திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து, வாகனத்திலிருந்து இறங்கி கீழே வந்து, பொதுமக்களை நேரில் பார்த்து, ஆதரவு கேட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu